கள் இறக்கஅனுமதியுங்கள், இல்லையெனில் தேர்தலை புறக்கணிப்போம்!

தேர்தலுக்கு சில நாட்களே இருக்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.மக்களும் தேர்தல் பிரச்சாரத்தை பயன்படுத்தி தங்களது கோரிக்கைகளை வேட்பாளர்களிடம் முன்வைத்து வருகின்றனர்.

தற்போது இது போன்ற ஒரு வித்தியாசமான கோரிக்கையை விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் பகுதி மக்கள் முன்வைத்துள்ளனர்.இதில் கள் இறக்க அவர்களை அனுமதிக்க வேண்டும் எனவும் இல்லையெனில் அவர்கள் தேர்தலை புறக்கணிக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

தங்களது தொழில் கள் இறக்குவதுதான் எனவும் அதனை தடைசெய்தால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும் கஞ்சனூர் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *