நோட்டாவிற்கு ஓட்டுப்போடாதீர்கள் சீமான் வேண்டுகோள்
தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 6-ல் நடைபெற உள்ளது.இதனையடுத்து தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தற்போது ஆவடியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
அப்போது பேசிய அவர்,அனைவரும் ஏதேனும் ஒரு கட்சிக்கு ஓட்டுப்போட வேண்டும் எனவும் நோட்டாவில் ஓட்டுப்போட்டு கேவலப்படுத்தாதீர்கள் எனவும் கேட்டுக்கொண்டார்.மேலும் ஓட்டுப் போடாமல் இருப்பது தேச துரோகத்திற்கு சமம் எனவும் பேசினார்.