ஒரே இடத்தில் இத்தனை போலி வாக்காளர்களா?புலம்பித்தள்ளும் வேட்பாளர்!
தேர்தலில் போலி வாக்களர்கள் என்பது எப்போதுமே தேர்தல் ஆணையத்துக்கு ஒரு சவாலாகவே அமைந்து வருகிறது.எத்தனை தேர்தல் சீர்திருத்தங்கள் செய்தாலும் கள்ள ஓட்டுகள் இன்னும் இருந்துகொண்டுதான் இருக்கின்றன.
ஈவிஎம்-ன் வருகை கள்ள ஓட்டுகளை தடுக்க உதவினாலும்,இன்னும் கள்ள ஓட்டுகளும் போலி வாக்காளர்களும் குறையவில்லை என்பதுதான் மறுக்கமுடியாத உண்மை.இது போன்ற ஒரு நிகழ்வு தற்போது கோவையில் அரங்கேறியுள்ளது.
கோவை தொண்டாமுத்தூரில் ஒரே இடத்தில் 700 போலி வாக்காளர்கள் உள்ளதாக திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி புகார் அளித்துள்ளார். தொண்டாமுத்தூர் தொகுதியில் போலி வாக்காளர்கள் மூலம் கள்ள ஓட்டுகள் போடா முயற்சி நடைபெறுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.