பூத் சிலிப்பில் தவறாக அச்சடிக்கப்பட்ட தேர்தல் நாள்,வாக்காளர்கள் குழப்பம்

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 6-ல் நடைபெற உள்ளது.இதனால் அனைத்து கட்சிகளும் தேர்தல் பரப்புரையை முடுக்கிவிட்டுள்ளது.

தேர்தல் வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அம்பத்தூர் தொகுதியில் பூத் சிலிப்பில் தேர்தல் நாள் ஏப்ரல் 4 என தவறாக உள்ளது.இதனால் வாக்காளர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

இதனையடுத்து,தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தேர்தல் தேதி தவறுதலாக அச்சிடப்பட்டுள்ளதாகவும் அது விரைவில் சரி செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *