பாஜக-வை இயக்குவது ஆர்எஸ்எஸ் என்ற தீவிரவாத இயக்கம் -திருமாவளவன்
தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.அனைத்து கட்சிகளும் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பாபநாசத்தில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
அப்போது பேசிய அவர்,பாஜக சராசரி அரசியல் கட்சியல்ல.அதை இயக்குவது ஆர்.எஸ்.எஸ் என்ற தீவிரவாத இயக்கம் என எம்.பி. திருமாவளவன் தெரிவித்துள்ளார். பாபநாசத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திருமாவளவன், சர்தார் வல்லபாய் பட்டேலால் தடை செய்யப்பட்ட இயக்கம்தான் ஆர்.எஸ்.எஸ் என்றும் கூறினார்.