தமிழகத்தின் வளர்ச்சிக்கு அதிமுக-பாஜக கூட்டணி அவசியம் – சி.டி.ரவி

தமிழகத்தின் வளர்ச்சிக்கு அதிமுக-பாஜக கூட்டணி அவசியம் என பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று கூட்டணி கட்சிகளின் தலைவர்களோடு இணைந்து ஒரே மேடையில் பரப்புரை மேற்கொண்டார்.அப்போது அவர் மத்தியில் இருக்கும் பாஜக-விற்கு அடிபணிந்து அதிமுக செயல்படுகிறது என விமர்சித்தார்.

இதனை சுட்டிக்காட்டி பேசிய சி.டி.ரவி, ராகுல் காந்தி புரியாமல் பேசுகிறார் எனவும் மத்திய-மாநில அரசுகளுக்கு இடையே நல்ல புரிதல் இருக்க வேண்டும் எனவும் கூறினார்.மேலும்,அந்த புரிதலே தமிழகத்தின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *