அசாம், மேற்கு வங்கத்தில் தொடங்கியது முதல் கட்ட வாக்குப்பதிவு!

தமிழகம், புதுச்சேரி, மேற்கு வங்கம், கேரளா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதில், தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. மேற்கு வங்கத்தில் மார்ச் 27 முதல் ஏப்ரல் 29 வரை 8 கட்டங்களாகவும் மற்றும் அசாமில் மார்ச் 27 முதல் ஏப்ரல் 6 வரை 3 கட்டங்களாகவும் தேர்தல் நடைபெறுகிறது.
அதன்படி மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளும் அசாமில் 47 தொகுதிகளும் என 77 தொகுதிகளுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை சரியாக 7 மணிக்குத் தொடங்கியது. கொரோனா காலம் என்பதால் பாதுகாப்பு நடைமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டு வாக்குப்பதிவு நடந்து வருகிறது.