போடி தொகுதியில் லேடி… துணை முதல்வரின் திட்டம் பலிக்குமா?
வரும் சட்டமன்ற தேர்தலில் தேனி மாவட்டம் போடி தொகுதியில் அதிமுக கட்சியின் சார்பாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார்.
அதிமுக கட்சியின் மூத்த தலைவரான அவர் தமிழகத்தின் மற்ற தொகுதிகளுக்கும் சென்று வாக்கு சேகரித்து வருகிறார். இதனால் அவரது தொகுதியில் அவரது மகன்களான ரவீந்திர நாத் எம்.பி. மற்றும் ஜெய பிரதீப் ஆகியோர் தனியாக பிரசாரம் செய்து வருகின்றனர். இந்த முறை சொந்த தொகுதி மக்கள் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ரவீந்திரநாத் மனைவி ஆனந்தி, தெருவிலுள்ள பெண்களுடன் இணைந்து, வீடு வீடாக சென்று, ‘எனது மாமனாரை வெற்றி பெற செய்யுங்கள்’ என, ஓட்டு கேட்டு வருகிறார்.
பிரச்சாரத்தில் அரசு, 10 ஆண்டுகளில் செய்த சாதனைகள், பிரதமர் மோடியின் சாதனைகளை புள்ளிவிபரங்களுடன் கூறி வாக்கு சேகரித்து வருகிறார். தற்போது அவரது பிரச்சாரத்திற்கு ஆதரவு கிடைத்து வருவதாகவும் கூறப்படுகிறது. மாமனாருக்காக மருமகள் தேர்தல் பிரச்சாரம் செய்து வருவது போடி தொகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.