சாமானியர்களுக்கு கிளார்க் வேலை கூட கிடைக்காது – கி. வீரமணி ஆவேசம்
சட்டப்பேரவைத் தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, நீலகிரி மாவட்டம் குன்னூரில் திமுக வேட்பாளர் கா.ராமசந்தினை ஆதிரித்து பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது, “நீட் தேர்வின் மூலம் பல கிராம மாணவர்களின் மருத்துவக் கனவு சிதைக்கப்பட்டுள்ளது. தற்போது, புதிய கல்விக் கொள்கை மூலம் கலை அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு அறிமுகப்படுத்தினால், சாமானிய மக்களுக்கு கிளார்க வேலை கூட கிடைக்காது.
தமிழகத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களில் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அதிகப்படியாக பணியமர்த்தப்பட்டு, தமிழக மக்கள் வஞ்சிக்கப்பட்டு வருகின்றனர். திமுக ஆட்சிக்கு வந்தால் மட்டுமே தமிழக மக்கள் காப்பாற்றப்படுவார்கள். அவர்களின் வாழ்வாதாரமும் செழிக்கும்.
திமுகவில் ஆத்திகரும் இருக்கிறார்கள், நாத்திகர்களும் இருக்கிறார்கள். ஆனால், திராவிடர் கழகத்தின் கொள்கை வேறு.மக்களின் அறியாமையில் இருந்து அவர்களைக் காக்க நூற்றாண்டு காலமாகப் போராடி வருகிறது” என்று பேசியுள்ளார்.