திமுகவிலிருந்து அதிமுகவிற்கு மாறிய முன்னாள் அமைச்சர்!
திமுகவின் முன்னாள் அமைச்சர் சின்னசாமி அதிமுகவில் இணைந்துள்ளார். மாநில விவசாய செயலாளராக இருந்த சின்னசாமியை கட்சியிலிருந்து திமுக தலைமை தற்காலிகமாக நீக்கியிருந்தது.
திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைய உள்ளதாக விளம்பரம் செய்திருந்த நிலையில் இந்த முடிவை தலைமை எடுத்திருந்தது.
இதுகுறித்து, திமுக தலைமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாநில விவசாய அணிச் செயலாளர் கரூர் ம.சின்னசாமி, கட்சிக் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்”என தெரிவிக்கப்பட்டுள்ளது.