100 சதவீதம் ஈ.வி.எம்,விவிபாட் பயன்படுத்த வேண்டும் -சீதாராம் யெச்சூரி

வருகின்ற தேர்தலில் 100 சதவீதம் ஈவிஎம்-விவிபாட் எந்திரங்களை பயன்படுத்தக்கோரி இந்திய தேர்தல் ஆணையத்திற்கு இந்திய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும்,அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்களின் மூலம் எவ்வாறு நிதி வருகிறது? அதில் உள்ள குறைபாடுகளையும் தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

கட்சிகளுக்கு இந்த தேர்தல் பத்திரங்கள் மூலம் கிடைக்கும் நிதி குறித்தும்,ஈவிஎம்-விவிபாட் மூலம் வாக்குசெலுத்துவதில் வெளிப்படையற்ற தன்மையும் நிலவி வருவதாகவும் அது குறித்து போதுமான விளக்கம் ஏதும் கொடுக்கப்பட வில்லை எனவும் அவர் கூறினார்.

இதனால், வாக்களர்கள் குழப்பத்தில் இருப்பதாகவும் அதனை தெளிவுபடுத்தும் பொறுப்பு தேர்தல் ஆணையத்திற்கு உள்ளது என அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *