அடுத்த தேர்தலில் ‘ரிமோட் ஓட்டிங்’ அறிமுகம்

அடுத்த லோக்சபா தேர்தலில் ரிமோட் ஓட்டிங் முறை அறிமுகப்படுத்தப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நம்பிக்கை தெரிவித்தார்.

latest tamil news


டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில், தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா பேசியதாவது,தேர்தலில் வாக்களிக்கும் முறையில், புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய திட்டமிட்டு உள்ளோம். இந்த தொழில்நுட்பத்தை, சென்னை, ஐ.ஐ.டி-யுடன் இணைந்து, ஆய்வு செய்து வருகிறோம். ‘ரிமோட் ஓட்டிங்’ எனப்படும், இந்த புதிய தொழில்நுட்பம் வாயிலாக, தேர்தலின் போது, தங்கள் தொகுதியில் உள்ள ஓட்டுச் சாவடிக்கு நேரில் செல்லாமல், வாக்காளர்களால் ஓட்டளிக்க இயலும். நாட்டின் எந்த பகுதியில் இருந்தாலும், அங்கு, அதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மையத்துக்குச் சென்று, வாக்காளர்கள் ஓட்டளிக்கலாம்.

latest tamil news


இந்த புதிய தொழில்நுட்பத்தை அமல்படுத்துவதற்கான சோதனை முயற்சி, இன்னும், இரண்டு அல்லது மூன்று மாதங்களில் துவங்க உள்ளது. லோக்சபாவுக்கு, 2024ல் நடக்கும் தேர்தலில், ரிமோட் ஓட்டிங் முறையை அறிமுகப் படுத்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வீட்டில் இருந்தபடி, வாக்காளர்களால் ஓட்டளிக்க முடியாது. தேர்தலின்போது, இதற்காக அமைக்கப்படும் சிறப்பு மையத்திற்கு நேரில் சென்று, ஓட்டளிக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *