காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குடியுரிமை திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படும் – ராகுல் காந்தி

தேர்தல் நடைபெறவுள்ள அஸ்ஸாமில் காங்கிரஸ் முன்னால் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குடியுரிமை திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.மேலும் நரேந்திர மோடி அரசு அஸ்ஸாம் மக்களை ஏமாற்றி வருவதாகவும் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

தேயிலை தோட்ட பணியாளர்களுக்கு ரூ.365 தருவதாக கூறி வெறும் ரூ.167 மட்டுமே கொடுத்து ஏமாற்றி வருவதாகவும் கூறினார்.நரேந்திர மோடி அரசிற்கு ஏமாற்றுவது ஒன்றும் புதிதல்ல என்ற ராகுல் தனக்கு மோடி போல பொய் கூற தெரியாது எனவும் பேசினார்.வெள்ளப்பெருக்கின்போது அஸ்ஸாம் மக்களை பார்க்காத பிரதமர் தற்போது அடிக்கடி அஸ்ஸாம் வருவது எதற்காக? தனக்கு ஓட்டு வேணும் என்பதற்காக மோடி அஸ்ஸாமிற்கு அடிக்கடி வந்து நடித்து வருகிறார் எனவும் தாக்கி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *