நடனப்புயலின் தேர்தல் பிரச்சாரப் பாடல் வீடியோ!

தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, 100% வாக்குப்பதிவு, பணம் வாங்காமல் ஓட்டு போடுவது குறித்து பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, நடிகர், பாடகர், இயக்குநர் என பன்முகத் திறமை கொண்ட ’நடனப்புயல்’ பிரபுதேவா தேர்தல் விழிப்புணர்வு பாடல் ஒன்றை பாடியுள்ளார். மேலும், தமிழக தேர்தலுக்கான தூதராகவும் பிரபுதேவா விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறார்.
ஏன் தேர்தலில் வாக்களிக்க வேண்டும், நமது உரிமை என்ன, வாக்களிக்க பணம் வாங்கக்கூடாது, எனது வாக்கு விற்பனைக்கு அல்ல என்பது போன்ற பல செய்திகள் அடங்கிய வீடியோவை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.