ஆரத்திக்கு பணம் கொடுத்த நத்தம் விஸ்வநாதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. வேட்புமனு தாக்கல் தொடங்கி தேர்தல் பரப்புரை வரை அனைத்து கட்சிகளும் பரபரப்பாக இயங்கி வருகிறது.

இந்நிலையில், அதிமுக வின் வேட்பாளர் நத்தம் விஸ்வநாதன் பரப்புரை செய்த பகுதிகளில் ஆரத்தி எடுத்த பெண்களுக்கு பணம் கொடுக்கும் வீடியோ வெளியானது.

இதனையடுத்து, வீடியோ ஆதாரத்துடன் அவர் மீது புகாரளிக்கப்பட்டது. தொடர்ந்து வழக்கும் தொடரப்பட்டது.

இந்த புகாரின் பேரில், நத்தம் விஸ்வநாதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்பது பற்றி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “புகார் குறித்து திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்டுள்ளோம். அவர் விளக்கமளித்த பிறகு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *