நோட்டா அதிக வாக்குகள் பெற்றால் புதிதாக தேர்தல் நடத்துமா தேர்தல் ஆணையம்?,தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் கேள்வி
தேர்தலில் ஏதேனும் ஒரு தொகுதியில் நோட்டா அதிக வாக்குகள் பெற்றால் மீண்டும் புதிதாக தேர்தல் நடத்துமா தேர்தல் ஆணையம் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.அஸ்வினி குமார் உபாத்யாயா வழக்கு தொடர்ந்ததையடுத்து உச்சநீதிமன்றம் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளது.மேலும்,மக்கள் வேட்பாளரை பிடிக்காத காரணத்தினாலேயே நோட்டாவில் வாக்கு செலுத்துகின்றனர்.ஒரு கட்சி வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் போது ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுப்பதில்லை என்று மனுதாரர் வழக்காடினார்.ஒருவேளை ஒவ்வொரு கட்சியும் வேட்பாளர்களை அறிவிக்கும் முன் அந்தந்த தொகுதி மக்களிடம் விருப்பம் கேட்டு அவர்கள் விருப்பப்படி வேட்பாளர்களை நிறுத்தினால் இந்த நோட்டா வாக்குகள் குறையும் எனவும் மனுதாரர் குறிப்பிட்டார்.