கொளுத்தும் வெயிலிலும் நடந்து சென்று ஸ்டாலின் வாக்குசேகரிப்பு!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி, ஒரே கட்டமாக அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அனைத்து கட்சிகளும் தங்கள் கட்சி வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

திமுக தலைவர் ஸ்டாலின், கொளத்தூர் தொகுதியில் போட்டியிட வேட்பு மனு அளித்துள்ளார். தனது தேர்தல் பிரச்சாரத்தை திருவாரூரில் இருந்து தொடங்கியுள்ளார்.

இன்று, சேலம் வடக்கு தொகுதி திமுக வேட்பாளர் ராஜேந்திரனை ஆதரித்து ஸ்டாலின் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். செவ்வாய்பேட்டை, சத்திரம் பால் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் ஸ்டாலின் நடந்து சென்றபடி பொதுமக்களிடம் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நடந்து சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட ஸ்டாலிக்கு மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *