ஒரு சிலிண்டரின் விலை 5000 ரூபாய்… பிரச்சாரத்தில் பிதற்றிய திண்டுக்கல் சீனிவாசன்!

அதிமுக தேர்தல் அறிக்கையில் வருடத்திற்கு 6 சிலிண்டர் இலவசம் என்று கூறிய நிலையில் ஒரு சிலிண்டரின் விலை ரூ.4500 முதல் 5000 வரை இருக்கும் என தேர்தல் பிரச்சாரத்தில் திண்டுக்கல் சீனிவாசன் பேசும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

தேர்தல் வந்தாலே அரசியவாதிகளின் பிரச்சாரம் களைகட்டும். அதிலும் சில அரசியல்வாதிகளின் பேச்சு நம்மையும் அறியாமல் சிரிக்க வைத்துவிடும். அப்படியொரு அரசியல்வாதிகள் ஒருவர் தான் தமிழக வனத்துறை அமைச்சரும், திண்டுக்கல் தொகுதி அதிமுக வேட்பாளருமான திண்டுக்கல் சீனிவாசன்.

இவர் திண்டுக்கல் தொகுதியில் மீண்டும் இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார். இதனால், கடந்த 13-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்நிலையில், தற்போது பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் திண்டுக்கல் சீனிவாசன் பிரச்சாரத்தில் உளறி மக்களின் அர்ச்சனையை வாங்கி வருகிறார். சமீபத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பிரச்சாரத்தில் பேசும் வீடியோ ஓன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அதிமுக தேர்தல் அறிக்கையில் வருடத்திற்கு 6 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்தது. இந்த திட்டத்தை சுட்டிக்காட்டி பேசிய அமைச்சர் ஒரு சிலிண்டர் ரூ.4500 முதல் ரூ.5000 வரை எனவும் 6 சிலிண்டர்கள் வருடத்திற்கு இலவசமாக தருவதாக முதலமைச்சர் அறிவித்ததாக கூறினார்.

ஒரு சிலிண்டர் விலை தற்போது ரூ.800 -க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் ரூ.5,000 என உளறியது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒருவேளை அதிமுக ஆட்சிக்கு வந்தால் கேஸ் சிலிண்டர் விலையை ரூ.5000 க்கு கொண்டு சென்று விடுவார்களோ என அச்சமும் மக்கள் மனதில் எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *