மேற்கு மண்டலத்தை மக்கள் நீதி மய்யத்தின் கோட்டையாக மாற்றுவோம் – மகேந்திரன்!
கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவர் ஆர்.மகேந்திரன், ”தமிழக மக்கள் மாற்றத்துக்கு ஆதரவளிப்பார்கள். அதற்கு, கோவை மக்கள் முன்னோடியாக இருப்பார்கள். கோவை தெற்கு, சிங்காநல்லூர் உள்ளிட்ட மநீம வேட்பாளர்கள் போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. மேற்கு மண்டலத்தில் நிறுத்தப்பட்டுள்ள அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெற்று, மேற்கு மண்டலத்தை மக்கள் நீதி மய்யத்தின் கோட்டையாக மாற்றுவோம்.
தேர்தலை முன்னிட்டு கூட்டணிக் காக பல கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், ஒருபோதும் தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தில் ஆட்சியில் இருந்தவர்கள் மீது ஊழல் புகார்கள் இருந்தாலும், தற்போதுள்ள சூழலில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தவர்களைப் பற்றி பேச வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.” வ்வாறு அவர் தெரிவித்தார்.