தமிழகத்தில் இன்று தொடங்குகிறது வேட்பு மனு தாக்கல்!

தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று 234 தொகுதிகளிலும் தொடங்குகிறது. இந்த தேர்தலில் முதன் முறையாக வேட்பாளர்கள் வைப்புத் தொகை (டெபாசிட்) ஆன்லைன் மூலம் செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 6 -ம் தேதி நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் இன்று (மார்ச் 12) தொடங்குகிறது.

கொரோனா பரவலை கருத்தில்கொண்டு வேட்புமனு தாக்கல் செய்யும் இடங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, “தினமும் காலை 11 மணியில் இருந்து மாலை 3 மணிவரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம்.

சனி மற்றும் ஞாயிறுகிழமைகளில் வேட்புமனு தாக்கல் இல்லை.
வேட்புமனுக்களை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம்.


தமிழக தேர்தல் அதிகாரி மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரியின் இணையதளத்தில் இருக்கும் வேட்புமனு மற்றும் பிரமாண பத்திரத்தை பூர்த்திசெய்து அதனை பதிவிறக்கம் செய்தபின் நோட்டரி கையெப்பம் பெற்று தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வழங்கவேண்டும்.

பொது தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ரூ.10 ஆயிரம் டெபாசிட் செலுத்தவேண்டும்.

தனி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ரூ.5 ஆயிரம் டெபாசிட் செலுத்தவேண்டும்.

டெபாசிட் வைப்புத் தொகையை சலான் அல்லது பணமாக செலுத்தலாம்.
கொரோனா பரவல் காரணமாக டெபாசிட் தொகையை ஆன்லைன் மூலம் பணம் செலுத்தம் வசதி முதன் முறையாக செய்யப்பட்டுள்ளது.

வேட்புமனு தாக்கலின்போது தேர்தல் அலுவலர் அறைக்குள் வேட்பாளருடன் இருவருக்கு மட்டுமே அனுமதி.

கொரோனா பரவல் காரணமாக வேட்புமனு தாக்கல் செய்யும் ஒவ்வொரு வேட்பாளருக்கும் தனித்தனி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.


மாவட்டத்தில் கொரோனா நோய்க் கட்டுப்பாட்டு பகுதி என அறிவிக்கப்பட்ட இடங்களில் யாரும் பிரச்சாரம் மேற்கொள்ளகூடாது” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *