கேக்-ல கூடவா தேர்தல் பிரச்சாரம்

மேற்கு வங்கம் தேர்தலை சந்திக்க உள்ள நிலையில் அங்குள்ள ஒரு பேக்கரியில் அரசியல் சின்னங்கள் மற்றும் தலைவர்களின் உருவங்கள் பொறித்த கேக் விற்பனை கலை கட்டியுள்ளது.இதில் “ஆட்டம் ஆரம்பித்துவிட்டது” “ஜெய் ஸ்ரீ ராம்” போன்ற வாசகங்கள் அதிக அளவில் வலம் வருகின்றன.மேலும் பிரதமர் மோடி மற்றும் மம்தா பானர்ஜி ஆகியோரின் உருவங்கள் பதித்த கேக்குகள் கடைகளின் முகப்புகளில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.