தேர்தலில் வாக்களிக்கனுமா… இது முக்கியம் பாஸூ!

முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதற்கிடையே கொரோனா தொற்றிலிருந்து வாக்காளர்களையும், தேர்தல் நடத்தும் அதிகாரிகளையும் பாதுகாப்பது குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வருகிறது.

இந்நிலையில், பாதுகாப்பு தொடர்பாக தமிழக தேர்தல் ஆணையம் சில உத்தரவுகளை விடுத்துள்ளது. அதாவது, வாக்களிக்க வரும் வாக்காளர்கள் முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே தங்களுடைய வாக்குகளை பதிவு செய்யப்பட அனுமதிக்கப்படுவார்கள் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் கடைசி ஒரு மணிநேரத்தில் தேர்தல் ஆணையம் மூலமாக வழங்கப்படும் பிபிஇ கிட்டை அணிந்து வந்து வாக்களிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி இறப்பு வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றம்

கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி இறப்பு வழக்கை கள்ளக்குறிச்சி நீதிமன்றத்திற்கு மாற்றி…

ஒப்பந்த செவிலியர்களை பணி நீக்கம் செய்த என்எல்சி மருத்துவமனை கண்டித்து போராட்டம்

நெய்வேலி என்எல்சி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய உதவி செவிலியர்களை பணி நீக்கம்…