வாக்காளர்களை சத்தியம் செய்ய உத்தரவிட முடியாது – சென்னை உயர் நீதிமன்றம்

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ந்தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து தேர்தல் நடத்தை விதி முறைகளும் நடைமுறைக்கு வந்துள்ளன. தேர்தலையொட்டி பணப்பட்டுவாடா புகார்களும் அதிகமாக இருக்கும்.

இதனையடுத்து, சூரிய பகவான் தாஸ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில், வாக்களிக்க வரும் ஒவ்வோரிடமும் வாக்குச்சாவடியில் நுழைவதற்கு முன்பாக ஓட்டிற்கு பணம் வாங்கவில்லை என சத்திய பிரமாணம் வாங்கிய பிறகு தான் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் என்றும், ஏற்கனவே இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் கொடுத்த மனுமீது நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதியின் அமர்வில் இன்று நடைபெற்றது. மனுதாரரின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களிடம் சத்திய பிரமாணம் செய்வது என்பது சாத்தியமில்லாதது. பணம் வாங்கிக்கொண்டு ஓட்டு போடக்கூடாது என்று தேர்தல் ஆணையம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இந்த நிலையில், மனுதாரர் கேட்கின்ற கோரிக்கை மீது எவ்வித உத்தரவும் பிறப்பிக்க முடியாது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தையும், அரசையும் அணுகும்படி வழக்கை முழுமையாக முடித்து வைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.

chennai high court

டோல்கேட் ஊழியர்கள் வேலை நிறுத்தம்  தொடர்பாக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திருச்சி – சென்னை தேசிய நெடுந்சாலையில் திருமாந்துறை, மற்றும் செங்குறிச்சி சுங்கச்சாவடிகளில் ஊழியர்கள்…

கிரானைட் தொழிற்சாலையில் பிளேடு அறுந்து விழுந்து டிராக்டர் டிரைவர் பரிதாப பலி

ஒசூர் அருகே கிரானைட் தொழிற்சாலையில் கற்களை வெட்ட பயன்படுத்தும் பிளேடு அறுந்து விழுந்து…