நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இலவச பெட்ரோல் தருவோம்… அதகள அறிவிப்புடன் அரசியல் களம் காணும் அர்ஜூன மூர்த்தி!

பள்ளி, கல்லூரி மாணவ மாணவியருக்கு பாஸ் பாஸ் உடன் இலவசமாக பெட்ரோல் போட்டுக்கொள்வதற்கு கார்டு தரப்படும் என அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார் அர்ஜூனமூர்த்தி.
தமிழக மக்கள் அவ்வளவு எளிதில் அர்ஜூனமூர்த்தியை மறந்திருக்க முடியாது. பா.ஜ.க அறிவுசார் பிரிவில் சிறப்பாக செயலாற்றி வந்தவரை, ரஜினி கட்சி தொடங்கவுள்ளார் இங்கே வாருங்கள் என்று அழைத்து வந்தவர் தமிழருவி மணியன். அறிவிக்கப்படாத கட்சிக்கு தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் அவர் அறிவிக்கப்பட்டார்.
ஆனால் ரஜினி அரசியல் கட்சியை தொடங்கும் அறிவிப்பில் இருந்து பின்வாங்கியது அர்ஜூனமூர்த்திக்கே பெரிய அதிர்ச்சி தான். அதை தொடர்ந்து தன்னுடைய அரசியல் வாழ்க்கைக்கு தானாகவே, முற்றுப்புள்ளி வைத்துக்கொண்டார் தமிழருவி மணியன். ஆனால் அர்ஜூனமூர்த்தி அதற்கு பிறகு தான் தீவிர அரசியலில் ஈடுபட முடிவு செய்தார். மீண்டும் அவர் பாஜக கட்சிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு முற்றிலும் மாறான நடவடிக்கையை அவர் மேற்கொண்டுள்ளார்.
இது வேற லெவல் அரசியல்,
இது தமிழ்நாட்டின் விஸ்வரூப அரசியல்,
உண்மையான மாற்றத்தின் அரசியல்,
தமிழ் மக்கள் முன்னேற்றத்திற்கு பயன்படும் அரசியல்,
இந்த கட்சிக்கு ஜாதி, மதம் இல்லை…
ஆணவத்தால் வரும் மதமும் இல்லை…#TNElections2021 pic.twitter.com/5ut8MJLrN5— Arjunamurthy Ra (@RaArjunamurthy) February 27, 2021
அதன்படி இன்று காலை ட்விட்டரில் தமிழக அரசியல் வாதிகள் அதிர்ந்து போகும் வகையில் ஒரு தகவல் பதிவிட்டார் அர்ஜூனமூர்த்தி, “இது வேற லெவல் அரசியல், இது தமிழ்நாட்டின் விஸ்வரூப அரசியல், உண்மையான மாற்றத்தின் அரசியல்,
தமிழ் மக்கள் முன்னேற்றத்திற்கு பயன்படும் அரசியல், இந்த கட்சிக்கு ஜாதி, மதம் இல்லை… ஆணவத்தால் வரும் மதமும் இல்லை…” என்று டி.ஆர் ரேஞ்சுக்கு அடுக்கு மொழி வசனத்தால் அதிரவிட்ட புதிய அரசியல் கட்சி தொடங்கப்போவதாக அறிவித்திருந்தார்.
அதை தொடர்ந்து இன்று காலை சென்னை வியாசர்பாடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார். மேலும் தன்னுடைய கட்சி ஆட்சிக்கு வந்தால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு பஸ் பாஸுடன் இலவச பெட்ரோல் கார்டு தரப்படும் என அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். மேலும், தமிழகத்தில் இ.ம.மு.க ஆட்சி அமைத்தால் 4 பேர் துணை முதல்வர்களாக நியமிக்கப்படுவார்கள் என்று அர்ஜூனமூர்த்தி கூறினார்.