ஏப்ரல் இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற வாய்ப்பு

தமிழகத்தில், சட்டப்பேரவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சிகளும் தங்கள் பரப்புரைகளைத் தொடங்கியுள்ளன.
தலைமைத் தேர்தல் அதிகாரிகளும் தமிழகம் வந்து, கட்சிச் தலைவர்களுடனும் தமிழக தேர்தல் அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தி சென்று விட்டனர்.

ஆனால், தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், பிளஸ் டூ மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மே மாதம் 3 ஆம் தேதி தொடங்கும் தேர்வுகள் மே 21 அன்று முடிவடைகின்றன.

தற்போதைய சட்டபேரவையின் பதவிகாலம் மே 24 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. அதற்கு முன்பாக அடுத்த சட்டப்பேரவை அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
இதனால், பொதுத் தேர்வுக்கு முன்பாக சட்டப்பேரவை தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். எனவே, ஏப்ரல் மாத இறுதியில் தேர்தல் நடைபெற வாய்ப்புகள் அதிகம் உள்ளன.