விபத்தில் பெற்றோரை இழந்த சேலம் மாணவியின் படிப்பு செலவை ஏற்றது தமிழ்நாடு அரசு…!

விபத்தில் பெற்றோர் மற்றும் சகோதரியை  இழந்த மாணவி அமுதா விற்கு  பசுமை வீடு திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான  ஆணையை  மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மாணவியிடம் வழங்கினார்..

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே கல்பாரப்பட்டியை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவரது மனைவி மாரியம்மாள். இவர்களது மகள்கள் பூங்கொடி, அமுதா. இந்த நிலையில் கடந்த 6ம் தேதி நடந்த சாலை விபத்தில் தந்தை வெங்கடாசலம், தாய் மாரியம்மாள்,  மூத்த சகோதரி பூங்கொடி ஆகியோர் பரிதாபமாக  உயிரிழந்தனர். இதனால் தனி மரமான அமுதா அவரது பாட்டி பராமரிப்பில் உள்ளார். 

இவர் இளம்பிள்ளை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ தேர்வில் 574 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளார். இந்நிலையில் பெற்றோரை இழந்ததால் உயர் கல்வியை தொடர முடியாத சூழல் ஏற்பட்டது. இது குறித்து சன் நியூஸ் செய்திகள் செய்தி ஒளிபரப்பப்பட்டது.  இதனால் பல்வேறு தரப்பினரும் மாணவிக்கு உதவிகளை செய்ய தொடங்கினார். இதனிடையே அமுதாவின் உயர்கல்வி செலவு, மருத்துவம், இருப்பிட வசதி உள்ளிட்டவற்றை தமிழக அரசு சார்பில் சேலம் மாவட்ட நிர்வாகம் முழுமையாக ஏற்றுக் கொள்ளும் என மாவட்ட ஆட்சியர் கார்மேகம் அறிவித்தார். 

அதனைத் தொடர்ந்து இன்றைய தினம் பசுமை வீடு திட்டத்தின் கீழ்  ₹2.10 லட்சத்தில் வீடு கட்டுவதற்கான ஆணையை மாணவி அமுதாவிடம் ஆட்சியர் கார்மேகம் வழங்கினார். விபத்தில் பெற்றோரை இழந்த தனக்கு மேற்படிப்பு மற்றும் வீடு கட்ட உதவி செய்த மாவட்ட ஆட்சியருக்கும், முதலமைச்சருக்கும் மாணவி அமுதா நன்றி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *