#BREAKING வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் அதிரடி திருப்பம்… பள்ளிகளுக்கு பறந்த நோட்டீஸ்!

DPI

திருப்புதல் தேர்வு வினாத்தாள் கசிந்த விவாகரத்தில் 2 பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 10 மற்றும் 12 ம் வகுப்புகளுக்கான முதல் திருப்புதல் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருப்புதல் தேர்விற்கான கேள்வித்தாள்கள் வாட்ஸ்ஆப், டெலிகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியானதாக பரபரப்பை ஏற்படுத்தியது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வு லீக் ஆனதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக திருவண்ணாமலை கல்வி அலுவலர் அருள்செல்வத்தை சஸ்பெண்ட் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள இரண்டு தனியார் பள்ளிகளுக்கு வினாத்தாள் கசிந்தது குறித்து விளக்கம் அளிக்க கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. வந்தவாசி மற்றும் போளூரில் இருக்க கூடிய இரண்டு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் கேள்வித்தாளை முன்கூட்டியே சோசியல் மீடியாவில் கசியவிடப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை கண்டறிந்துள்ளது,. இந்த விவகாரம் தொடர்பாக 2 வாரங்களுக்கு பதிலளிக்க ஆணையிட்டு இரண்டு பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

தனியார் மயமாக்கும் மின்சார சட்ட திருத்தத்தை திரும்பபெறவேண்டும் முத்தரசன் கண்டனம்

நாட்டின் கட்டமைப்பை ஒழித்து கட்ட முயலும் பாஜகவின் நடவடிக்கைகளை கண்டித்தும், மத நல்லிணக்கத்தை…

மூன்று நாட்களாக கட்டணமில்லாமல் கடந்து செல்லும் வாகனங்கள், டோல்கேட் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் 

பெரம்பலூர் திருமாந்துறை சுங்கச்சாவடியில் மூன்று நாட்களாக அனைத்து ஊழியர்களும் பணிகளை புறக்கணித்து உள்ளிருப்பு…