தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் புதிய தகவல்..! 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வுக்கு காத்திருக்கும் தேர்வர்களுக்கு ஒரு புதிய அறிவிப்பை தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இது போன்ற தேர்வுகளில் காலத்துக்கேற்ப மாற்றங்களைத்  தேர்வாணையம் ஏற்படுத்திக்கொண்டே வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது போன்ற போட்டித்  தேர்வுகளின் நம்பகத்  தன்மையை அதிகரிப்பதற்காக இது போன்ற  நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் TNPSC- யில் ஒரு முறை பதிவு கணக்கு வைத்திருக்கும் தேர்வர்கள் அனைவரும்  இந்த மாதம் 28 ஆம் தேதிக்குள் தங்களின் ஆதார் எண்ணை இணைத்திருக்கு வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இது குறித்து டி.என் .பி.எஸ்.சி பலமுறை அறிவுறுத்தல்களை வழங்கி இருந்த நிலையில் மீண்டும் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதனை தொடர்ந்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் ஒரு முறை நிரந்தர பதிவு (One Time Registration – OTR) கணக்கு வைத்திருக்கும் அனைத்து தேவர்களும் அவர்களின் ஆதார் எண்ணை குறித்த விபரங்களை 28.02.2022 ஆம் தேதிக்குள் தவறாமல் இணைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும் இந்த நிரந்தர பதிவு எண் மூலமாக விண்ணப்பங்களை  சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்த  தகவல்களை தெரிந்து கொள்ள  18004190958 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்  அல்லது helpdesk@tnpscexams.in /grievance.tnpsc@tn.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தகவல்களை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது 

Leave a Reply

Your email address will not be published.

எய்ம்ஸ் விவகாரத்தில் ஒன்றிய அரசு ‘ஒன் சைட் கேம்’ விளையாடுகிறது – பிடிஆர் சாடல்

கட்சியை பொறுத்தவரை நான் அடிமட்ட தொண்டன் மட்டுமே தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவது குறித்து…

அக்.29 வரை கனமழை நீடிக்கும்; இன்றைய நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் பரபரப்பு எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது….

‘புதுச்சேரி வெளிச்சமாக இருக்கிறது’, மின் துறை தனியார் மயமாக்கலை பற்றி தமிழிசை

புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கோயமுத்தூர் வருகை தனியார் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் சிறப்பு…