இன்று வெளியாகிறது +2 மறுமதிப்பீடு முடிவுகள்!

தமிழகத்தில் +2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கான ரிசல்ட் கடந்த ஜூலை மாதம் 19-ஆம் தேதி வெளியானது. தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களை மறுகூட்டல் செய்வதற்காக கால அவகாசம் கொடுக்கப்பட்டது. இந்நிலையில், இன்று மறுகூட்டல் மற்றும் கூடுதல் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான ரிசல்ட் காலை 11 மணிக்கு வெளியாகும் என அரசு தேர்வுகள் நடத்தும் இயக்குநர் சேதுராமன் வெர்மா தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் பேசிய அவர், கூடுதல் தேர்வு எழுதியுள்ள மாணவர்கள் மறுகூட்டலுக்காக விண்ணப்பித்துள்ளனர் எனவும், அதற்கான முடிவினை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.மேலும், அறிவிப்பு பட்டியலில் மாணவர் பெயர் இல்லை என்றால் அவர்கள் எடுத்த மதிப்பெண்ணில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக மறுகூட்டலுக்குப் பிறகு ஒரு மாணவரோ அல்லது மாணவியோ மதிப்பெண் பெறும் பட்சத்தில் அவர்களுடைய மதிப்பெண்ணை அவர்களின் பெயர் மற்றும் ரோல் நம்பர் போன்ற விவரங்களை உள்ளீடு செய்து விடைத்தாளினை தற்காலிகமாக பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.