தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது? கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!

கொரோனா பரவலின் காரணத்தால் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
இந்நிலையில், பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், கொரோனா பரவல் தொடர்பான பெற்றோர்களின் அச்சம் குறைந்த பிறகு தான் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.