1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல்பாஸ்

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஓராண்டுக்கும் மேலாக பள்ளிக்கள் திறக்காமல் உள்ளன. வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாக நடைபெற்று வருகிறது.
12 ஆம் வகுப்பைத் தவிர அனைத்து மாணவர்களுக்கும் தேர்வு இல்லை என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக தொடக்கக்கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
ஆனால், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு 12 ஆம் வகுப்புத் தேர்வு நிச்சயம் நடைபெறும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுருக்கிறார்.
முழு ஊரடங்கு முடிந்ததும் பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிக்கப்படும் என தொடக்கக் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார். மேலும், எந்த மாணவரையும் தேக்க நிலையில் வைக்கக்கூடாது.
எந்த குழந்தையும் பள்ளியைவிட்டு வெளியேற்றக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், தலைமை ஆசிரியர்கள் பள்ளி பதிவேட்டில் மாணவர்களின் தேர்ச்சி விவரத்தை பதிய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.