பல்கலைக் கழக பாடத்தில் திமுக, இடது சாரிகள் குறித்து தவறான தகவல்…அமைச்சர் ஆதங்கம்

உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, “ திறந்த நிலை பல்கலைக் கழகங்களில், தொலைத்தூர கல்வி பயிலும் மாணவர்களின் பாடப்புத்தங்களில் தவறான தகவல்கள் அச்சிடப்பட்டுள்ளன. குறிப்பாக, எம்.ஏ சமூக அறிவியல் பாட புத்தகங்களில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் குறித்து தவறான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன” என தெரிவித்தார்.

மேலும், இதற்கு ஆதாரமும் இருக்கிறது என்று கூறும் அவர், “சமூக அறிவியல் பாட புத்தகத்தின் 142 ஆவது பக்கத்தில் ’ இந்திய கட்சிகள் குறிப்பாக மதங்களுக்கு எதிரான திமுக, பொதுவுடைமைக் கட்சிகள் மக்களை வாக்கு வங்கிகளாக மாற்றி வருகின்றன. அந்தக் கட்சிகள் அந்த மக்களை தேசியப் பாதையில் கலந்துவிடாமல் தடுக்கின்றன. அவை கண்மூடித்தனமாகச் சிறுபான்மையினரை ஆதரிக்கின்றன. முகமதியர் கலவரம் உருவாக்கி, வன்முறை வெடிப்பதைக் கண்டிக்காமல் இருக்கின்றன என்று அச்சிடப்பட்டுள்ளது’ . சமூக அறிவியல் பாட புத்தகத்தில் இடம்பெற வேண்டிய விஷயங்களா இவை” என கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து, “ நானும் சமூக அறிவியல் படித்து ஆசிரியராக பணியாற்றியவன் தான். இந்த பாடம் குறித்து துணைவேந்தரிடமும் வகுப்பு ஆசிரியடமும் விளக்கம் கேட்டும் எந்த பயனும் இல்லை. இந்த விவகாரம் தொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து தொலை தூர கல்வி பாடப்புத்தகங்களையும் ஆய்வு செய்து, திருத்த வேண்டிய தேவை இருந்தால் அதற்கென ஆசிரியர்களைக் கொண்டு தனியாக குழு அமைக்கப்படும். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக முதல்வரிடம் ஆலோசித்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *