வாட்ஸ்அப்-ஐ பயன்படுத்தி பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள்…. வழிகாட்டு முறைகள் வெளியீடு!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பள்ளி மாணவர்களுக்கு தேர்வு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதனையடுத்து சிறிய வகுப்புகளுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இருப்பினும் 12-ஆம் வகுப்புக்கான தேர்வு பின்னர் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சில நாட்களுக்கு முன்னர் 12 ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும் எனவும் , தேர்வின்றி தேர்ச்சி என்று மாணவர்கள் இருந்துவிட வேண்டாம் எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில் தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையில் வாட்ஸ் அப் மூலம் அலகுத் தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

வாட்ஸ்அப் அப்ளிகேஷனில் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியே குழு ஏற்படுத்த வேண்டும். அந்த குழுவில் வினாத்தாள் மற்றும் விடைத்தாள் தவிர வேறு எந்த தகவலும் பதிவிடவோ, பரிமாறவோ கூடாது. அந்த குழுவில் வினாத்தாள்களை அனுப்ப வேண்டும். மாணவர்கள் விடைத்தாளில் தங்களது பெயர், தேர்வுத் துறையால் வழங்கப்பட்ட பதிவெண் முதலியவை கட்டாயம் இடம்பெற செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் விடைத்தாள்களை வாட்ஸ் அப் மூலம் திருத்தி அதற்கான மதிப்பெண்களை வழங்க வேண்டும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *