குரூப் 1 முதன்மைத் தேர்வு ஒத்திவைக்கப் படுகிறதா?

குரூப் 1 முதன்மைத் தேர்வு வருகிற மே 28 முதல் 30 ஆம் தேதி வரை நடத்தப் படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் திட்டமிட்டபடி குரூப் 1 முதன்மைத் தேர்வு நடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

குரூப் 1 முதல்நிலைத் தேர்வு கடந்த ஜனவரி மாதம் 3 ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை 2 லட்சத்து 52,237 பேர் எழுதியுள்ளனர். கடும் கட்டுப்பாடுகளுடன் 856 தேர்வு மையங்களில் நடைபெற்றது.

மொத்தம் 66 காலிப் பணியிடங்களுக்கு நடைபெற்ற இந்த தேர்வில் பலரும் முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்று அடுத்தக் கட்ட தேர்வான முதன்மைத்துத் தேர்வுக்கு தகுதி பெற்றனர். இந்நிலையில் தினசரி அதிகரிக்கும் கொரோனாவால் முதன்மைத் தேர்வு நடைபெறுமா? அப்படியே நடைபெற்றாலும் அது தேர்வகளின் பாதுகாப்பை உறுதிபடுத்துமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *