நீங்கள் பார்த்தே தேர்வு எழுதுங்கள்! பல்கலைக்கழக அறிவிப்பால் மாணவர்கள் மகிழ்ச்சி
கொரோனா தொற்று சென்ற ஆண்டு பரவத் தொடங்கிய போது, பள்ளி மாணவர்களுக்கு தேர்வு நடத்தாமல் அனைவரும் தேர்சி என அறிவிக்கப்பட்டது. ஆனால், கல்லூரி மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது.
ஆனால், அண்ணா பல்கலைக்கழகம் தங்களுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட மென்பொருளின் மூலம் மாணவர்களுக்கு தேர்வுகளை நடத்தியது. இந்நிலையில், ஒரு வருடத்தைக் கடந்தும் கொரோனா பாதிப்பு இன்னும் முடியவில்லை.
இதனால், இந்த ஆண்டும் மாணவர்களுக்குத் தேர்வுகள் ஆன்லைனில் தான் நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. ஆனால், சென்ற ஆண்டைப் போல இல்லாமல் ஆன்லைன் தேர்வில் பல மாற்றங்களைச் செய்துள்ளது.
சென்ற செமஸ்டர் தேர்வில் கேட்கப்பட்டது போல, ஒரு வரிக் கேள்விகளாக அல்லாமல் மாணவர்கள் சிந்தித்து விரிவாக விடையளிக்கும் வகையில் கேள்விகள் இடம்பெற உள்ளதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
மேலும், விடையளிக்கையில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் புத்தகத்தைப் பார்த்து சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ளவும், இணைய தளத்தை பயன்படுத்திக் கொள்ளவும் பல்கலைக்கழகம் அனுமதித்துள்ளது.