சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்தாகுமா?
இந்தியாவில், கொரோனா பரவலின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. அதனைக் கட்டுப்படுத்த இந்திய அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், கொரோனா பரவலைக் கட்டுபடுத்தும் விதிமுறைகளை மாநில அரசுகளே தனித்தனியாக எடுத்துக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.
இதனையடுத்து, கொரோனா பரவலால் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும், 12 ஆம் வகுப்பைத் தவிர அனைத்து வகுப்புகளும் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக அறிவித்தது. ஆனால், மத்திய அரசு சிபிஎஸ்இ தேர்வுகளை நடத்துவதில் உறுதியாக உள்ளது.
கொரோனா பரவலால் சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர், “டில்லியில் மட்டும் கிட்டத்தட்ட 6 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுத உள்ளனர். ஒரு லட்சம் ஆசிரியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர். தற்போதைய சூழலில் கொரோனா பரவுவதற்கான வாய்ப்பாக இந்த தேர்வு அமைந்துவிடும். ஆகவே மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தேர்வை ரத்து செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.