திட்டமிட்ட படி பொதுத்தேர்வுகள் நடைபெறுமா?

தமிழக பள்ளிக்கல்வித் துறை பன்னிரண்டாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வுகள் மே மாதம் 3 ஆம் தேதி நடைபெறும் என அறிவித்திருந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவல் வேகமெடுத்து வருவதால் பன்னிரண்டாம் வகுப்பைத் தவிர மற்ற அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு ஆல்பாஸ் என அறிவிக்கப்பட்டது.

கொரோனா தொற்றின் வேகம் இன்னும் தீவிரமடைந்துள்ள நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, திட்டமிட்ட படி பன்னிரண்டாம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்தது.

சில நாட்களுக்கு முன்பு, பன்னிரண்டாம் வகுப்பு செய்முறைத் தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளதால், பொதுத் தேர்வை நடத்த பள்ளிக்கல்வித் துறை ஆயத்தமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *