பிளஸ் டூ செய்முறைத் தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டு, வகுப்புகள் இணைய வழியாக நடந்து வருகிறது. 12 ஆம் வகுப்பைத் தவிர மற்ற அனைவரும் ஆல் பாஸ் என அரசால் அறிவிக்கப்பட்டது.

இதனால், தற்போது 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும். மாணவர்களை பல பிரிவுகளாகப் பிரித்து செய்முறை தேர்வுக்கு அனுமதிக்க வேண்டும். செய்முறைத் தேர்வுக்கு முன்னரும், பின்னரும் அறையை கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்ய வேண்டும்.

செய்முறைத் தேர்வின்போது PIPETTE க்கு பதில் BURETTE பயன்படுத்தலாம். ஆய்வக அறையில் தீப்பிடிக்கக்கூடிய பொருட்கள் அருகே சானிடைசரை வைக்கக்கூடாது. செய்முறை தேர்வு நடைபெறும்போது கதவுகள், ஜன்னல்கள் அனைத்தும் ஆய்வகத்தில் திறந்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *