கொரோனா விழிப்புணர்வு பரப்புரையில் கலக்கிய கல்லூரி மாணவிகள்!

ஸ்ரீ கிருஷ்ணசாமி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பாக கொரோனா நோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை மாநகர காவல்துறையுடன் இணைந்து நடைபெற்றது.

கல்லூரி மாணவிகள் மாஸ்க் அணிவது, அடிக்கடி சோப் போட்டு கை கழுவுவது, சானிடைசர் உபயோகிப்பது மற்றும் தனிநபர் இடைவெளி கடைபிடிப்பது தொடர்பாக கைகளில் பதாகைகள் ஏந்தியவாறு மக்களிடம் விளக்கிச் சொல்லி விழிப்புணர்வு பரப்புரை செய்தனர்.

கொரோனா பாதிப்பு தற்போது மேலும் தீவிரமடையத் தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் மிகவும் பாதுகாப்புடன் அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும் என்று மாணவிகள் வலியுறுத்தியது பொதுமக்களை வெகுவாகக் கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *