பிளஸ் 2 செய்முறை தேர்வை ஏப்ரல் 16 ஆம் தேதி நடத்த உத்தரவு!

பிளஸ் 2 செய்முறை தேர்வை அனைத்து பள்ளிகளும் ஏப்ரல் 16ஆம் தேதி முதல் நடத்த வேண்டும் என அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

கொரோனா காரணமாக தமிழகத்தில் ஒன்று முதல் 9ஆம் வகுப்பு வரை ஆல்பாஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 10 முதல் 12ஆம் வகுப்பு வரை தேர்வு நடைபெற உள்ளது. அதில் 12ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மே 3ஆம் தேதி 12ஆம் வகுப்புக்கு தேர்வு தொடங்குகிறது.

ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முடிவு மே 2ஆம் தேதி வெளியாகிறது. எனவே இதற்கு நடுவே செய்முறை தேர்வை நடத்தி முடிக்க அரசு தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது.

அதன்படி, ஏப்ரல் 16ஆம் தேதி முதல் செய்முறை தேர்வை நடத்த அனைத்து பள்ளிகளுக்கும் அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. ஏப்ரல் 23ஆம் தேதிக்குள் பொது பிரிவு மற்றும் தொழில்கல்வி பாடப்பிரிவுகளில் படிக்கும் மாணவர்களுக்கு செய்முறை தேர்வை நடத்தி முடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் மதிப்பெண் விவரங்களை பட்டியலிட்டு அதனை ஏப்ரல் 24ஆம் தேதி முதன்மை கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் எனவும் தேர்வுத்துறை கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *