குரூப்-2 தேர்வுக்கு இலவச பயிற்சி

டின்பிஎஸ்சி வெளியிட்ட வருடாந்திர தேர்வுக்கான அட்டவணையின்படி, குரூப்-2 தேர்வுக்கான அறிவிப்பு மே மாதம் வெளியாக உள்ளது. இந்தத் தேர்வின் மூலம் 2000 காலி பணியிடங்கள் நிரப்பபடலாம்.

இதனைக் கருத்தில் கொண்டு, அம்பேத்கர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி மையம், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் மற்றும் தீண்டாமை ஒழிப்புச் சங்கம் ஆகியவை இணைந்து, குரூப்-2 தேர்வுக்கான இலவச பயிற்சியை அளிக்கவுள்ளது.

இங்கு, மாதிரித் தேர்வுகள் நடத்தப்பட்டு தொழில்நுட்ப ரீதியாகவும்  மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் பயிற்சிகள் இருக்கும். முன்னாள் மாணவர்களும், அரசுத் துறைகளில் பல்வேறு துறைகளில் உள்ளவர்களும் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து, ஆலோசனைகளை வழங்குவார்கள்.

இப்பயிற்சி வகுப்புகள் பாரிமுனை அரண்மனைக்காரன் தெருவில் உள்ள, சிஐடியு அலுவலகத்தில் நடைபெறும். பிப்ரவரி 21 ஆம் தேதி தொடங்கி, வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிறுக் கிழமைகளில் காலை 9.30 மணி முதல் 4.30 மணி வரை நடைபெறும்.  

Leave a Reply

Your email address will not be published.

இந்தோனேசியாவில் பயங்கரம்!! கால்பந்து மைதானத்தில் மோதல்… 127 பேர் பலி!!

இந்தோனேசியாவில் கால்பந்து போட்டியின் போது ரசிகர்கள் மைதானத்திற்குள் புகுந்து தாக்கியதால் ஏற்பட்ட வன்முறையில்…

ஓடும் ரயிலில் அமைச்சருக்கு திடீர் உடல் நலக்குறைவு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு ஓடும் ரயிலில் திடீர் உடல் நலக்குறைவு. சிதம்பரம்…

இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளரை தென்னை மட்டையால் அடித்தே மட்டையாக்கிய 12 பேர் கைது

கோபி அருகே உள்ள கவுந்தப்பாடியில் இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளராக உள்ள…