தூப்பாக்கியால் சுட்டு முன்னாள் ராணுவ வீரர் பலி
மதுரை பெத்தானியாபுரம் தாமஸ் வீதியை சேர்ந்தவர் ராஜேந்திரன், முன்னாள் ராணுவ வீரர். மதுரையில் உள்ள தனியார் வங்கியில் பாதுகாவலராக பணியாற்றி வருகிறார். கடந்த சில தினங்களாக பணிக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று காலை வீட்டின் மாடிக்கு சென்று தூப்பாக்கியை சுத்தபடுத்தி கொண்டிருந்த போது திடீரென்று எதிர்பாராத விதமாக தூப்பாக்கி வெடித்ததில் வயிற்று பகுதியில் குண்டு பாய்ந்தது, இதனையடுத்து மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது. எதிர்பாராத விதமாக தூப்பாக்கி வெடித்ததா?அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என கரிமேடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை.