சவாரி ஏற்றுவதில் மோதல்; ஆட்டோ ஓட்டுனரை கல்லால் அடித்துக்கொலை செய்த நண்பர்கள்

மதுரையில் சவாரி ஏற்றுவதில் ஆட்டோ ஓட்டுனர்களிடையே ஏறபட்ட மோதல் – ஆட்டோ ஓட்டுனரை கல்லால் அடித்துக்கொலை செய்த சக ஆட்டோ ஓட்டுனர்கள் கைது. – காவல்துறையினர் தீவிர விசாரணை
மதுரை மாநகர் எம் கே புரத்தைச் சேர்ந்த மணிகண்டன்(47), நாகராஜ் (28) மற்றும் சம்மட்டிபுரம் பகுதியை சேர்ந்த சூரிய பிரகாஷ் (24) ஆகியோர் ஷேர் ஆட்டோ ஓட்டுனர்களாக இருந்துவருகின்றனர்.
இவர்கள் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு வெளியூர்களில் இருந்துவரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை மீனாட்சியம்மன் கோவில் அருகேயுள்ள மதுரை நேதாஜிரோடு பகுதியில் உள்ள ஜான்சி ராணி பூங்காவிலிருந்து பக்தர்களை ஏற்றிக்கொண்டு எல்லீஸ்நகர் மீனாட்சி அம்மன் கோவில் பார்க்கிங் பகுதியில் ஆட்களை இறக்கி விடுவது வழக்கம்.
இந்நிலையில் சவாரிக்கான ஆட்களை இறக்கிவிடுவதில் மணிகண்டன் மற்றும் நாகராஜ்(28), சூரிய பிரகாஷ்(24) ஆகியோருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது தகராறாக மாறிய நிலையில். ஆட்டோ ஓட்டுனர்களான நாகராஜ் அவரது நண்பர் சூரிய பிரகாஷ் ஆகியோர் நேற்று இரவு ஆட்டோ ஓட்டுனர் மணிகண்டனை செங்கலால் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலயே பரிதாபதாக உயிரிழந்தார்.
இதனையடுத்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த திலகர்திடல் காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இது குறித்து உயிரிழந்த மணிகண்டனின் மனைவி மீனா(38) அளித்த புகாரின் கீழ் திலகர்திடல் காவல்துறையினர் கொலை வழக்குப்பதிவு செய்து மதுரை மாநகர் எம் கே புரத்தைச் சேர்ந்த நாகராஜ் (28)மற்றும் சம்மட்டிபுரம் பகுதியை சேர்ந்த சூரிய பிரகாஷ் (24) ஆகிய இருவரை கைது செய்தனர்.