சிறுமிகளை பாலியல் தொழிலில் தள்ளிய கணவன், மனைவி இருவருக்கு 27 ஆண்டுகள் சிறை

கைது

ஆசை வார்த்தை கூறி சிறுமிகளை பாலியல்  தொழிலில்  தள்ளிய வழக்கில் கணவன் மனைவி இருவருக்கு 27 ஆண்டுகள் கடுங்காவல்  தண்டனை விதித்து திருவள்ளூர் மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் மணலி பகுதியைச் சேர்ந்தவர்  கணவரை இழந்தவர் சித்ராதேவி  வயது (37 ) இவர் அதே பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய திருநாவுக்கரசு என்பவரிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.இருவரும் பல்வேறு இடங்களில் சென்று உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

அதைத் தொடர்ந்து பின்னர் சித்ரா தேவிக்கு அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு நபரான 30 வயதுடைய தஸ்தகீர் என்ற இளைஞரிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் பல்வேறு இடங்களுக்குச் சென்று உல்லாசமாக இருந்து வந்தபின் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இதில் திருநாவுக்கரசு தஸ்தகீர் இனைந்து சித்ரா தேவியை விபச்சாரத்திற்கு தள்ளி பணம் சம்பாதித்து உள்ளனர். மேலும் விபச்சாரத்திற்கு இளம் பெண்களை தள்ளினால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என மூவரும்  முடிவு செய்து.

மணலி பகுதியில் வறுமையில் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த 15 ,13 வயதுடைய வெவ்வேறு பகுதியைச் சேர்ந்த இரண்டு சிறுமிகளுக்கு புதிய துணி பணம் தருவதாக கூறி அவர்களையும் மணலி மற்றும் திருவெற்றியூர் பகுதியில் தனியாக வீடு எடுத்து பாலியல் தொழிலுக்கு தள்ளி  பணம் சம்பாதித்து வந்துள்ளனர்.

இவர்கள் மீது அப்பகுதி மக்கள் சமூக நலத் துறைக்கு கொடுத்த புகாரின் அடிப்படையில் சமூக நலத்துறை அதிகாரிகள் மணலி காவல் நிலையத்தில் அது தொடர்பாக கடந்த 2014 ஆம் ஆண்டு புகார் ஆனது அளித்திருந்தனர்.

அத்தகைய புகாரின் அடிப்படையில்  போலீசார்  சிறுமிகளை வைத்து பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்திய திருநாவுக்கரசு சித்ராதேவி ,தஸ்தகீர் ஆகிய மூவரையும் கைது செய்தும் இரு சிறு சிறுமிகளையும் காப்பகத்தில் ஒப்படைத்தும் போலீசார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

அதன் பிறகு இவ்வழக்கை சி.பி .சி.ஐ.டி போலீசாரும் விசாரணை மேற்கொண்டதில் உண்மை உறுதியானதால். இவ் வழக்கு விசாரணையானது திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் கடந்த 9 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் இறுதி விசாரணையானது இன்று திருவள்ளூர் மகிளா நீதிமன்ற நீதிபதி சுபத்ரா தேவி முன் வந்தது.

இவ் வழக்கில் மூவரும் இணைந்து சிறுமிகளை பாலியல் தொழிலுக்கு தள்ளியதற்கான ஆதாரம் உறுதியானதால். இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக திருநாவுக்கரசு ஏற்கனவே மரணமடைந்து விட்டதால் .

சித்ராதேவி மற்றும் அவருடைய கணவர் தஸ்தகீர் இருவருக்கும் 27 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் 7000 ரூபாய் அபராதம் விதித்து  நீதிபதி சுபத்ரா தேவி தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு  2014 ஆம் ஆண்டு அரசு தலா மூன்று லட்ச ரூபாய் அவர்களுக்கு நிவாரண தொகை அளித்திருந்தது.

 பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு ஆதரவாக அரசு தரப்பு வழக்கறிஞர் அமுதா வாதாடினார் . சிறுமிகளுக்கு ஆசை வார்த்தை கூறி விபச்சாரத்திற்கு தள்ளிய வழக்கில் கணவன் மனைவி இருவருக்கு திருவள்ளூர் மகிளா நீதிமன்றம் 27 ஆண்டுகள்  கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *