பெண்ணை வெட்டி கொலை வெறி தாக்குதல்; காவல் ஆய்வாளருக்கு பிடி வாரண்ட்!

பெண்ணை வெட்டி  கொலை வெறி தாக்குதல் நடத்திய  வழக்கில் எட்டு முறை வாய்தா வாங்கி ஆஜராகாமல் இழுத்தடித்த காவல் ஆய்வாளருக்கு  நீதிபதி பிடிவாரண்ட் பிறப்பித்தது அதிரடி உத்தரவு.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் கடந்த 2017 ஆம் ஆண்டு பெண் ஒருவரை தாக்கி வெட்டிய வழக்கில் விசாரனை அதிகாரியாக இருந்த ஆய்வாளர் நீதிமன்றத்தில் ஆஜராகாத நிலையில் அவருக்கு பிடி வாரண்டு பிறப்பித்து நீதிபதி அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இளையாண்குடி அருகே உள்ள  வலக்கானி கிராமத்தை சேர்ந்த நாகமீனாள் என்கிற பெண்ணை கடந்த 2017 ஆம் ஆண்டு அதே கிராமத்தை சேர்ந்த மகாதேவன் மற்றும் அவரது மனைவி அழகுமீனாள்,மகன் அஜித்குமார் ஆகியோர் இடப்பிரச்சனை தொடர்பான பிரச்சனையில் தாக்குதல் நடத்தி வெட்டியதாக இளையான்குடி காவல்நிலையத்தில் நாகமீனாள் அளித்த புகாரின் அடிப்படையில் அப்பொழுது காவல்நிலைய சார்பு ஆய்வாளராக இருந்த செந்தூர்பாண்டியன் என்பவர் வழக்கு பதிவு செய்தார். 

அந்த வழக்கு சிவகங்கை செசன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் 19 சாட்சிகளின் விசாரனை நிறைவடைந்த நிலையில் விசாரனை அதிகாரியாக இருந்த செந்தூர் பாண்டியன் தற்சமயம் பதவி உயர்வு பெற்று புதுக்கோட்டை மாவட்டம் கரம்பங்குடி காவல்நிலைய ஆய்வாளராக பணிபுரிந்து வரும் நிலையில் 

கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இன்று வரை 8 வாய்தா வழங்கி நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தினால் சிவகங்கை மகிளா விரைவு நீதிமன்ற நீதிபதி சரத்ராஜ் (பொறுப்பு) அவர்கள் ஆய்வாளர் செந்தூர் பாண்டியனுக்கு பிடி வாரண்டு பிறப்பித்ததுடன் அவரை 12-09-2023 ஆம் தேதியன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *