சதுரங்க வேட்டை பட பாணியில் ரைஸ் புல்லிங் இயந்திரம் என பலரிடம் மோசடி; 2பேர் கைது

சதுரங்க வேட்டை படத்தில் வருவது போல் வந்தவாசி அருகே  இரிடியம் கண்டுபிடிக்க போலியாக  ரைஸ் புல்லிங் இயந்திரம்   என  கூறி பல பேரிடம் பணம் பறிப்பு –  2 பேர் கைது –  20000 ஆயிரம்  ரூபாய் இருசக்கர வாகனம் இயந்திரம்  போலீசார் பறிமுதல்  – பெரும் பரபரப்பு. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி  அடுத்த ஆரியாத்தூர் கிராமத்தில் வீடு வாடகை எடுத்து சதுரங்க வேட்டை படத்தில் வருவது போல் இரிடியம் கண்டுபிடிக்க போலியாக  ரைஷ் புல்லிங் இயந்திரம்  என‌ கூறி பல பேரிடம் ஏமாற்றி பணம் பறிப்பு.  2 பேரை போலீசார் கைது செய்தனர். 

விழுப்புரம் மாவட்டம் நாப்பாளையத்தை சேர்ந்தவர் சங்கர் கணேஷ் இவர் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் அதிக அளவில் கடன் ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து சங்கர் கணேஷ் நண்பர்கள்  மூலமாக ரைஸ் புல்லிங் இயந்திரம்  வாங்கி குறுக்கு வழியில் அதிக  பணம் சம்பாதிக்கலாம் என்று முடிவு செய்துள்ளார்.

இந்த நிலையில் வந்தவாசி அருகே உள்ள   அளத்துரை கிராமத்தை சேர்ந்த காண்டிபன் மற்றும் திருவண்ணாமலை நல்லவன் பாளையம் பகுதியை சேர்ந்த குணசேகரன் ஆகியோர் வந்தவாசி அடுத்த ஆரியாத்தூர் கிராமத்தில் வாடகை வீடு எடுத்து சதுரங்க வேட்டை படத்தில் வருவது போல் இருடியம் கண்டுபிடிப்பதற்காக புல்லிங் இயந்திரம் வைத்துக்கொண்டு  வேலைகளை செய்து வருவது தெரியவந்தது.

இதை எடுத்து சங்கர் கணேஷ் ஆரியாத்தூர் கிராமத்திற்கு நேரில் வந்து  ரைஸ் புல்லிங் இயந்திரம்  வாங்குவதற்கு வந்தார். அதற்கு  அவர்கள் 5 லட்சம் கேட்டு உள்ளனர். அதற்கு சங்கர் கணேஷ்  முதலில்  ரூபாய் 20 ஆயிரம் கொடுத்துள்ளார். அவர்கள்  போலியான புல்லிங் ரைஷ் இயந்திரம் காட்டினர்.  அப்போதுதான் சங்கர் கணேஷுக்கு இது போலி என்று  தெரியவந்தது. இது போலி என்று  உஷாரான சங்கர் கணேஷ் சந்தேகமடைந்த நிலையில் அங்கு இருந்து மீதி  பணம் எடுத்து வருவதாக கூறினார். 

பின்னர் சங்கர் கணேஷ்  கீழ்கொடுங்காலூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில்  வந்தவாசி டிஎஸ்பி கார்த்திக் உத்தரவின் பேரில் கீழ்கொடுங்காலூர் காவல் ஆய்வாளர் பாலு, உதவி ஆய்வாளர் விநாயக மூர்த்தி மற்றும் போலீசார் ஆரியாத்தூர் கிராமத்திற்கு நேரில்  சென்று அங்கு வாடைகை வீடு எடுத்து தங்கி  இருந்த காண்டிபனை கைது செய்து ரைஸ் புல்லிங் இயந்திரம்  மற்றும் தயாரிப்பு  செய்வதற்கான மூல பொருட்களை  போலீசார்  கைப்பற்றினர். போலீசார் வருவதை அறிந்து  அங்கு இருந்து விவசாய நிலத்தின் வழியாக  தப்பி ஓடிய குணசேகரனை போலீசார்  விரட்டி சென்று  கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இரண்டு பேரையும் கீழ்கொடுங்காலூர் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை  நடத்தினர். விசாரணையில் காண்டிபன் ஏற்கனவே செங்கல்பட்டு மாவட்டம் எலப்பாக்கம் கிராமத்தில் போலியாக பொதுமக்களுக்கு  மருத்துவம்  பார்த்த புகாரில்  அடிப்படையில்  ஒரத்தி போலீஸால் கைது செய்யப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளது.  மேலும் குணசேகரன் மீது சிலை கடத்தல் வழக்கு திருவண்ணாமலை காவல் நிலையத்தில் வழக்கு  நிலுவையில் உள்ளது. என்று கீழ்கொடுங்காலூர் போலீசாருக்கு  திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.

மேலும் இவர்கள் கைது செய்யப்பட்ட அறிந்த பொதுமக்கள் கேரள மாநிலம் பாலக்காடு, தஞ்சாவூர், சென்னை புரசைவாக்கம், தர்மபுரி, அரியலூர், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில்  இருந்து ரைஸ் புல்லிங் இயந்திரம் வாங்க ரூபாய் 5000,10000,15000, பணம் கொடுத்து வாங்க சதுரங்க வேட்டை படத்தில் வருவது போல் இடைத்தரகர்கள் ஆரியாத்தூர் கிராமத்திற்கு  வந்து சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. அவர்களும் போலி என்று வாங்காமல் திரும்பி   சென்று உள்ளனர். பல்வேறு மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் புகார் தராமல்  வாய் வழியாக கீழ்கொடுங்காலூர்  காவல் நிலையத்தில் புகார் கூறி உள்ளனர்.

மேலும் பல பொதுமக்களிடம்  பல லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு இவர்கள் ஏமாற்றியது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து கீழ்கொடுங்காலூர் போலீசார் காண்டீபன் மற்றும் குணசேகரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இவர்களிடம் இருந்து ரைஸ் புல்லிங் இயந்திரம், தயார் செய்ய மூல பொருட்கள்,  இருசக்கர வாகனம், 20 ஆயிரம் ரூபாய் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும்  பொதுமக்களிடம்   பணத்தை  பெற்றுக்கொண்டு இதேபோல் இடைத்தரகர்கள்  செய்து வருகின்றனர்.   இனி மேலாவது பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று கீழ்கொடுங்காலூர் காவல் நிலைய போலீசார் கூறினர். வந்தவாசி அருகே சினிமா பாணியில்  போலியான ரைஷ்  புல்லிங் இயந்திரம்   பொதுமக்களிடம் கொடுத்து  பணம் பறிப்பு  சம்பவம்  வந்தவாசி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *