‘பழிக்குப் பலி ரிவஞ்ச்’ மூன்று தினங்களுக்குள் 2 கொலை சம்பவம் 15 பேர் கைது.

திண்டுக்கல் – திருச்சி  சாலையில் தீப்பாச்சி அம்மன் கோவில்  உள்ளது. இங்கு இரும்பு பட்டறை உள்ளது. இப்பகுதியை சேர்ந்தவர் சரவணன்.  இவரது தந்தை இரும்பு பட்டறை வைத்துள்ளார். இவர் பட்டறை வேலை செய்து வந்ததால் இவருக்கு அடைமொழியாக பட்டறை சரவணன் என நண்பர்களால் அழைக்கப்பட்டு வந்தார். இவர் தற்போது திண்டுக்கல்  மாநகர கிழக்கு பகுதி மாணவரணி துணை அமைப்பாளராக இருந்து வருகிறார்.

இவருக்கு திருமணமாகி பவதாரணி என்ற மனைவி மற்றும் வேதமித்திரன் என்ற 2 வயது மகன் உள்ளனர், இவர் தனது குடும்பத்துடன் வ உ சி நகர் பகுதியில் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார்.  இவர் மீது கொலை, ஆள் கடத்தல், கொலை முயற்சி, அடிதடி  என பல வழக்குகள் நிலுவையில் உள்ளது இந்நிலையில் கடந்த 21.07.23 இரவு திண்டுக்கல் அண்ணாநகர் தைலத் தோப்பில்  தனது 2 வயது குழந்தையுடன் விளையாடி விட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு தனது குழந்தையுடன் வந்து கொண்டிருந்தார்.  

அப்பொழுது அண்ணாநகர் அருகே சாலையில் வந்து கொண்டிருந்தபோது காரில்  வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பட்டறை சரவணனை கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களால் கழுத்து, தலை, மற்றும் உடம்பில் பல இடங்களில் வெட்டியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.  இது தொடர்பாக திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை குற்றவாளிகளை தேடி வந்தனர்.

போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் விசாரணையில் முன் பகை காரணமாக சரவணன் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது. கொலை செய்யப்பட்ட சரவணனின் நண்பரான பேகம்பூர் நத்தர்ஷா தெருவை சேர்ந்த பார்த்த என்ற இப்ராம்ஷா என்பவரை திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பிரபல ரவுடியும் இந்திய தேசிய லீக் முன்னாள் மாநில இளைஞரணி தலைவரான அல் ஆசிக் என்ற ஆசிக் முகமது மற்றும் அவரது ஆட்கள் சேர்ந்து கடந்த 2021 ஆம் ஆண்டில்  குட்டியபட்டி அருகே வைத்து கொலை செய்தனர் இந்நிலையில் தான் அல் ஆஷிக்கிற்கும், சரவணனுக்கும் நேரடி மோதல் தொடங்கியது 

இதற்கிடையில் அல் ஆஷிக் ஓரினச்சேர்க்கை தொடர்பான வீடியோக்களை  சமூக வலைதளங்களில் வைரலாக வெளிவந்தது.  இதனை பட்டறை சரவணன் தான் சமூக வலைதளங்களில் பரவ விட்டு தன்னை அசிங்கப்படுத்தினான் ஆகையால் இதற்கு  காரணமான பட்டறை சரவணன் கொலை செய்ய வேண்டும் என அல் ஆஷிக் திட்டம் தீட்டினார். பல நாட்களாக சரவணனை பின் தொடர்ந்து வேவு பார்த்து வந்துள்ளார். நாள்தோறும் பட்டறை சரவணன் அண்ணா நகர் சவுக்கு தோப்புக்கு வருவது தெரிய வந்ததை அடுத்து  தனது ஆதரவாளர்களுடன் கடந்த 20 தேதி அல்ஆசிக் தனது ஆதரவாளர்களுடன் வந்து  பட்டறை சரவணன் கொலை  செய்து  விட்டு காரில் தப்பி சென்றனர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நடுவர் நீதிமன்றத்தில்  அல் ஆஷிக், முகமது மீரான், கலீல் அகமது, சதாம் உசேன், முகமது இர்ஃபான், முகமது அப்துல்லா, மகேஸ்வரன், சேக் அப்துல்லா உள்ளிட்ட 8 பேரும் கடந்த 21ம் தேதி சரணடைந்தனர். பின்னர் சரண் அடைந்த 8 பேரையும் திண்டுக்கல் நிதிமன்றத்திற்கு அழைத்துச் சென்று ஆஜர் படுத்துமாறு காவல்துறையினருக்கு நிதிபதி உத்தரவிட்டார். 

இதனை அடுத்து துப்பாக்கி ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திண்டுக்கல் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர் பின்னர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2ல் மேஜிஸ்திரேட் திருமதி மீனாட்சி முன்பு ஆஜர் படுத்தினர் 8 பேரையும் ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்தார் இதனை எடுத்து 8 பேரும் திருச்சி மத்திய சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்நிலையில் பட்டறை சரவணனை  கொலை செய்ய திட்டம் தீட்டி கொடுத்தது நடு மாலப்பட்டி காலனியைச் சேர்ந்த பெயிண்டர் முனீஸ்வரன் என்பது தெரிய வந்தது இதனை எடுத்து சரவணனின் நெருங்கிய கூட்டாளிகள் 8 பேர் கடந்த 23ஆம் தேதி முனீஸ்வரன் தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பொழுது வீடு புகுந்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். 

இந்த கொலை சம்பவம் தொடர்பாக திண்டுக்கல் மற்றும் நல்லாம்பட்டி சேர்ந்த சரவணனின் கூட்டாளிகளான மணிகண்டன் என்ற பங்க்,மணி ராசு என்ற ராஜ், மாதவன், தினேஷ், சசிகுமார் 5 பேரை போலீசார் கைது செய்து திண்டுக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஒன்றில் ஆஜர் படுத்தினர் மேஜிஸ்திரேட் திருமதி பிரியா அவர்களை காவலில் வைக்க உத்தரவிட்டார் இந்நிலையில் கொலை தொடர்பாக சரவணனின் கூட்டாளிகளான  பொன்மான்துறை புதுப்பட்டியைச் சேர்ந்த ஸ்ரீரங்கன், குரும்பபட்டியைச் சேர்ந்த உதயகுமார் ஆகியோர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1ல் சரணடைந்தனர். 

பழிக்குப் பலியாக திண்டுக்கல்லில் மூன்று தினங்களுக்குள் இரண்டு பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *