’தானா சேர்ந்த கூட்டம்’ பாணியில் அதிகாரிகளை மிரட்டி பல் லட்சத்தை ஆட்டயப்போட்ட நபர் கைது

ஊழல் அதிகாரிகளை குறிவைத்து லஞ்ச ஒழிப்பு அதிகாரி என போன் செய்து  ஆந்திர மற்றும் தெலுங்கானா அதிகாரிகளை மிரட்டி ₹ 1.02 கோடி வசூல் செய்த பணம் பறித்து வந்த இளைஞரை கைது செய்த ஐதராபாத் போலீசார்

 ஆந்திரா, தெலங்கான  மாநிலங்களில் உள்ள அரசு ஊழியர்களுக்கு போலி (  ஏசிபி ) லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி என  போன் செய்து மிரட்டி ₹.1.02 கோடி வசூல் செய்த  இளைஞரை ஷம்ஷாபாத் போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம்  அனந்தபுரம்  மாவட்டம் விடப்பனகல்லு மண்டலம் கொத்தலப்பள்ளியைச் சேர்ந்த நுத்தேதி ஜெயகிருஷ்ணா (28) பி.காம் முடித்துள்ளார். 

எஸ்.ஐ.ஆக வேண்டும் என்ற கனவு நினைவாகாத நிலையில் உல்லாசமாக இருக்க 2017ல் அனந்தபூரில் முதல் முறையாக செயின் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் சந்தித்த  பெங்களூரைச் சேர்ந்த ஸ்ரீநாத்  என்பவருடன் அறிமுகமானார்.  இதனையடுத்து இருவரும் சூர்யா நடித்த  தானா சேர்ந்த கூட்டம் படம் தெலுங்கில் கேங் என்ற பெயரில் வெளியானது. அந்த படத்தில் சூர்யாவின் நடிப்பை  தாங்களும் முன் உதாரனமாக எடுத்து கொண்டு ஸ்ரீநாத்தும், ஜெயகிருஷ்ணாவும் லஞ்ச ஒழிப்பு   அதிகாரிகளாக மாறினார். 

2019ல் இருவரும் நெல்லூர் மாவட்ட போக்குவரத்து துறை அதிகாரிக்கு போன் செய்து பணம் வசூல் செய்தனர். இதில்  அவர் கொடுத்த புகாரில் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் சிறையில் இருந்து  விடுதலையான பிறகு ஜெயகிருஷ்ணா தனது கல்லூரி நண்பர்களான ராகவேந்திராவை சந்தித்தார். ராமச்சந்திராவுடன் சேர்ந்து அனந்தபூரில் 16 செயின் பறிப்புகளை செய்து  மீண்டும் சிறையில் அடைத்தனர். சிறையில் சந்தித்த சால்மன் ராஜ், சாய்குமார், கங்கையா ஆகியோரையும் தனது கூட்டணியில் இணைத்து கொண்டு 2019 முதல் 2022 வரை பல மாவட்டங்களில் உள்ள பல்வேறு துறை அதிகாரிகளுக்கு போன் செய்தார்.  

ஆந்திராவில் வழக்குகள் அதிகரித்ததால், பெங்களூரு சென்று அங்கிருந்து தெலுங்கானாவில்  உள்ள அதிகாரிகளுக்கு போன் செய்து மிரட்டி பணம் பறித்து வந்தார். இதற்காக  அரசு அதிகாரிகள் செல்போன் எண்களை அரசு இணையதளங்களில் இருந்து பல்வேறு மாவட்ட அதிகாரிகளின் தொலைபேசி எண்களை டெலிபோன் டிரக்டரி மூலம்  சேகரித்தார்.  கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் சித்திபேட்டை, சங்கரெட்டி, மஞ்சிரியாலா, வாரங்கல், மேடக், கொத்தகுடம், மேட்சல், ஹைதராபாத் உள்ளிட்ட 15 மாவட்டங்களின் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் 200 பேரை மிரட்டி ₹ 70 லட்சம் வசூல் செய்தனர். 

போலீசார் செல்போன் டவர் சிக்னல் வைத்து கண்டு பிடிக்க முடியாதபடி பெங்களூருவில் காலை முதல் மாலை வரை ஏசி பஸ்சில் பல்வேறு பகுதிகளில் சுற்றி கொண்டு  அதிகாரிகளுக்கு போன் செய்து    மிரட்டி போன் பே, கூகுல் பே மூலம் பணம் வசூலித்துள்ளார்.  அதன் பிறகு போனை சுவிட் ஆப் செய்து வந்துள்ளார்.    இதில் லஞ்ச ஒழிப்புத்துறை  இன்ஸ்பெக்டர் மற்றும் டிஎஸ்பி என மிமிக்ரி செய்து இரு குரலில் பேசி ஊழல் அதிகாரிகளை மிரட்டி வசூல் செய்து வந்துள்ளார். 

இந்த ஆண்டு ஜூன் மாதம், சித்திப்பேட்டை மாவட்டத்தில் உள்ள குடிமைப் பொருள் வழங்கல் துறை அதிகாரி ஒருவரையும், ஷம்ஷாபாத் அதிகாரி ஒருவரையும் மிரட்டினார்.  அவர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி ஒரு வாரத்திற்கு மேல் தொடர் கண்காணிப்பில் ஈடுப்பட்டு ஜெயகிருஷ்ணாவை  கைது செய்தனர். அவரிடம் இருந்து ₹.85 ஆயிரம் ரொக்கம், ₹.2.24 லட்சம் வங்கி கணக்கில் இருந்து பறிமுதல் செய்தனர். மேலும் ஐந்து சிம்கார்டுகள், 8 போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.  

ஜெயகிருஷ்ணா மீது ஆந்திராவில் 32 வழக்குகளும், தெலுங்கானாவில் 3 வழக்குகளும் உள்ளன.  ஓங்கோல், ஏலுரு, அனந்தபூர் கிருஷ்ணா மாவட்டத்தில் ‘மோஸ்ட் வாண்டட்’ குற்றவாளிகள் பட்டியலில் உள்ளதாக செம்ஷாபாத் டிசிபி நாராயண ரெட்டி தெரிவித்தார். இதில் ஷம்ஷாபாத் ஏசிபி ராமச்சந்திர ராவ், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் எஸ்டபிள்யூஓடி இன்ஸ்பெக்டர் சத்யநாராயணா ஆகியோருடன்  இணைந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *