சினிமா பாணியில் ஜீஸ் செய்த பைக்கை வைத்து சீன் போட்டு சிக்கிய உளவுத்துறை காவலர்கள்…!

விபத்து வழக்கில் சிக்கிய இருசக்கர வாகனத்தை ஆட்டைய போட்டு நான்கு ஆண்டுகளாக ஓட்டி வந்த உளவுத்துறை போலீசார் தற்போது கள்ளச்சாராய விவகாரத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இருசக்கர வாகனத்தை இரவோடு இரவாக காவல் நிலையத்தில் வைத்து உரியவருக்கு போன் செய்து வாகனம் கிடைத்து விட்டதாக கூறி நாடகமாடும் சித்தாமூர் காவல் நிலைய   மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உளவுத்துறை போலீஸ் பக்தவச்சலம்

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 13 ஆம் தேதி  கள்ள சாராயம் அருந்தி 8 பேர் உயிரிழந்தனர் இந்தப் பகுதியில் கலாச்சாராயம் விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருவது மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உளவுத்துறை போலீசான பக்தவச்சலம் என்பவருக்கு வாரந்தோறும் மாமூல் பெற்றுக் கொண்டு கள்ளச்சாராயம் விற்பதற்கு உறுதுணையாக இருந்தது தெரியவந்தது 

இதனை அடுத்து பக்தவச்சலம் அடுத்த மாதம் ஓய்வு பெறும் நிலையில் நெஞ்சுவலி காரணமாக மருத்துவ விடுப்பு எடுத்து திடீரென சென்று விட்டார் தற்போது ஜமீன் எண்டத்தூர் பகுதியைச் சேர்ந்த சிவபாலன்  இவர் தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு மாலை மதுராந்தகம் அருகே முதுகரை பகுதியில் சிவபாலன் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானது இதில் எதிரே வந்தவர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் வாகனத்தை சித்தாமூர் போலீசார் இருசக்கர வாகனத்தை  கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு சிவபாலனை காவல் நிலையத்தில் விசாரணை நடத்தினர் 

அப்பொழுது காவல் நிலையத்தில் சிவபாலனை விடுவிக்க 25 ஆயிரம் பெற்றுக் கொண்டு பிணையில் விடுவித்தனர் அதன் பிறகு சிவபாலன் வாரந்தோறும் காவல் நிலையத்திற்கு சென்று தனது வாகனத்தை ஒப்படைக்கும்படி கேட்டுள்ளார் ஏற்கனவே வேறொரு இடத்தில்  விபத்துக்குள்ளான வாகனத்தை காண்பித்து சிவபாலன் வாகனத்தில் உள்ள என்னை அந்த இருசக்கர வாகனத்தில் பொருத்தி இதுதான் உன் வாகனம் என்று கூறிவிட்டனர்

இந்த நிலையில் சிவபாலன் தனியார் தொழிற்சாலையில் வேலை செய்த நிலையில் வேலை பறிபோனது இதில் மனம் உடைந்த சிவபாலன் ஏற்கனவே விபத்து குள்ளான வாகனம் இது எனது வாகனம் இல்லை என்று கூறி உளவுத்துறை போலீசாரிடம் மாதம்தோறும் வாரம் தோறும் சென்று வாகனத்தை கண்டுபிடித்து கொடுங்கள் என்று கேட்ட வண்ணம் உள்ளார் சிவபாலன்

காவல் நிலையத்தில் வந்து வாகனத்தை கேட்ட போது உளவுத்துறை போலீஸ் பக்தவச்சலம் அதே இருசக்கர வாகனத்தில் சிவபாலனை அழைத்துக் கொண்டு பஜார் வீதியில் தேனீர் வாங்கி கொடுத்து சமாதானமாக அனுப்பி உள்ளார் என்று கூறுகின்றனர் அதற்கு பக்தவச்சலம் காவல் நிலையத்தில் உனது வாகனம் இல்லை இதற்கு முன் இருந்த ஆய்வாளரிடம் கேட்டு சொல்கிறேன் கோர்ட் போலீசாரிடம் கேட்டு சொல்லுகிறேன் என பலமுறை கூறி திருப்பி அனுப்பி உள்ளார்  காவல் நிலையத்தில் ஏதாவது ஒரு வாகனத்தை எடுத்துச் செல்லும்படி அடிக்கடி கூறி வந்துள்ளார் பக்தவச்சலம்  கடந்த நான்கு ஆண்டுகளாக சிவபாலன் வாகனம் காணவில்லை என்று கூறி வந்த நிலையில் 

திடீரென இரண்டு நாட்களாக சிவபாலனுக்கு பக்தவச்சலம் போன் செய்து வாகனத்தை தயவு செய்து எடுத்து கொள்ளுங்கள் என்று கூறி கதறி அழுது வருகிறாராம் மேற்கொண்டு பணம் வேண்டுமானாலும் தருகிறேன் தயவுசெய்து காவல் நிலையத்திலிருந்து இருசக்கர வாகனத்தை எடுத்துச் செல்லுங்கள் என்று கூறி வருகிறார் சிவபாலன் காவல் நிலையத்திற்கு வரும்போது எல்லாம் பக்தவச்சலம் தனது இருசக்கர வாகனத்துடன் வரும்பொழுது படம் எடுத்து வைத்துள்ளார் அதில் காவலருக்கு உரிய பாணியில் பக்கவாட்டில் பெட்டி கட்டி லட்டிக்கு என்று தனி பைப் அமைத்து வேறொரு வாகன பதிவு என்னை வைத்து பக்தவச்சலம் திருட்டு வாகனத்தில் வலம் வந்துள்ளார் 

கடந்த நான்கு ஆண்டுகளாக ராஜாவாக இருந்தவர் தற்போது சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வரும் நிலையில் தப்பிக்க இருசக்கர வாகனத்தை காவல் நிலையத்தில் இரவோடு இரவாக பெட்டி அனைத்தையும் கழட்டிக்கொண்டு திருட்டுத்தனமாக இருசக்கர வாகனத்தை  கொண்டு வந்து காவல் நிலையத்தில் பின்புறத்தில் நிறுத்தி உள்ளார்  இதுகுறித்து இரவு காவலிடம் கேட்டபோது அப்படி யாரும் இரவில் வாகனத்தைக் கொண்டு வந்து விடவில்லை என்று கூறுகின்றனர் இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் பிரனீத் அவரிடம் கேட்டபோது இதுவரை எனது காதுக்கு அது போன்ற தகவல் வரவில்லை பக்தவச்சலம் மருத்துவ விடுப்பில் சென்றுவிட்டார் தற்போது சித்தாமூர் காவல் நிலையம் காலியாக உள்ளது இது குறித்து விசாரணை மேற்கொண்டு  தகவல் தருகிறேன் என்று கூறி வைத்து விட்டார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *