மரத்தில் தூக்கில் தொங்கிய சமையல் மாஸ்டர் கொலையா? காவல் துறையினர் விசாரணை…!

காங்கேயம் பாளையத்தில் மரத்தின் கிளையில் நைலான் கயிற்றில் தூக்கில் மண்டியிட்ட நிலையில் தொங்கிய நிலையில் ஆண் சடலமாக போலீஸாரால் மீட்கப்பட்டார். சிவகங்கை மாவட்டம் சூரானம் ஏரிவயல் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் அன்பழகன் வயது 37. இவர் காங்கேயம்பாளையத்தில் செல்லபாண்டி என்பவர் நடத்தும் டாஸ்மார்க் மது பாரில் சமையல் மாஸ்டராக பணிபுரிகிறார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக காங்கேயம் பாளையம் டாஸ்மார்க் மது பாரில் ரகளை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திங்கள்கிழமை காலை சமையல் மாஸ்டர் ராஜேந்திரனை காணவில்லை என தேடி உள்ளனர். அப்போது டாஸ்மார்க்கில் இருந்து சுமார் 100 அடி தூரத்தில் உள்ள ஒரு மரத்தின்கிளையில் ராஜேந்திரன் உடல் மண்டியிட்ட நிலையில் நைலான் கயிற்றில் தொங்கிக் கொண்டுள்ளது தெரியவந்தது.
இதனை அடுத்து உடனடியாக சூலூர் காவல் துறையினருக்கு அங்கிருந்தவர்கள் தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு சென்ற சூலூர் காவல் துறையினர் ராஜேந்திரன் உடலை கைப்பற்றி ராஜேந்திரன் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாரேனும் கொலை செய்து தூக்கில் தொங்க விட்டனரா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ராஜேந்திரன் உடலை உடல் கூராய்வு பரிசோதனைக்காக சிங்காநல்லூர் இ எஸ் ஐ அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த டாஸ்மாக் மதுக்கடையை மூடகூறி அப்பகுதி பொதுமக்கள் நீண்டகாலமாக போராடி வருவது குறிப்பிட தக்கது.